.

Pages

Thursday, September 21, 2017

ஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகை வழக்கத்திற்கு மாறாக அதிகமாகக் காணப்படுகிறது. தினமும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணி அறிவுரையின் பேரில், மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை மேற்பார்வையில், மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம், அதிராம்பட்டினம் ஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

முகாமில், அரசு மருத்துவமனை மருத்துவர் ஏ. சனோபர் ஜஹான் தலைமையில், மருத்துவக்குழுவினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில், இரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் மாத்திரைகள், டானிக், குளுகோஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், முகாமில் நிலவேம்பு குடிநீர், டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், அறிவுரைகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாட்டினை ஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்தனர்.

மேலும் அதிராம்பட்டினம் காந்தி நகர் பகுதியில் நடந்த மருத்துவ முகாமில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர், டாக்டர் புவனா தலைமையில், மருத்துவக்குழுவினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். அதேபோல், ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் நடந்த மருத்துவ முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர் அசோக்குமார் தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.