.

Pages

Saturday, September 30, 2017

அதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து மான் சாவு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினத்தில் தண்ணீருக்காக ஊருக்குள் வந்த பெண் புள்ளிமானை நாய் விரட்டி கடித்ததில் மான் இறந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செடியன் குளம் மேல்கரை அருகே சுமார் 4 முதல் 5 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமானை, நாய்கள் விரட்டி கடித்ததில் உடலில் காயங்களுடன் சனிக்கிழமை காலை இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலர் பி. ஆனந்த ஜோதி, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் வி. முத்துலட்சுமி, முத்துப்பேட்டை வனச்சரக வனக்காப்பாளர் பி. மாரிமுத்து, அதிராம்பட்டினம் வனக்காவலர் சிவனேசன், பட்டுக்கோட்டை வனச்சரக வனக்காப்பாளர் எல். பன்னீர்செல்வம், வனக்காவலர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சி.தெய்வ விருத்தம் உடற்கூறாய்வு செய்தார். பின்னர் வனச்சரகர்கள் குளக் கரையின் அருகிலேயே பாதுகாப்பாக புதைத்தனர்.

சரணாலயத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் வனப் பகுதியைவிட்டு வெளியே வரும் மான்கள் நாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.