.

Pages

Saturday, September 23, 2017

வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 பேருக்கு பணி நியமன ஆணை (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னர் அரசு சரபோஜி கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்புத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து நடத்திய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், இன்று (23.09.2017) தொடங்கி வைத்து பல்வேறு நிறுவனங்கள் தேர்வு செய்த 50 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட மூலம் (23.09.2017) இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு நடைபெற்றது.  இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னை அம்பத்தூர் டிவிஎஸ் டிரெயினிங் அன்ட் சர்வீஸ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, பெரம்பலூர் எம்.ஆர்.எப். கம்பெனி, தஞ்சாவூர் வல்லம் ஸ்பின்னிங் மில் கம்பெனி, தஞ்சாவூர் பாலாஜி அப்பல்லோ ஹோம் ஹெல்த் கேர், தஞ்சாவூர் அபி அண்ட் அபி குரூப் கம்பெனிஸ், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், எலைட் பிரைவேட் லிமிடெட், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர்-திருச்சி-சென்னை வேவ் குரூப் ஆப் கம்பெனிஸ், கோயம்புத்தூர் எஸ்.எஸ். டெக்னோவேஷன், அப்பல்லோ மருத்துவமனை, ஹோட்டல் சங்கம் தஞ்சாவூர், அசோக் லைலண்ட் சென்னை போன்ற 86 நிறுவனங்கள் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்கள் நேரடியாக தேர்வு செய்தனர்.

இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் கே.மனோகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.காந்தி, மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், நிக்சல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குநர் சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குருசேவ், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் இளங்கோவன்,   திருச்சி மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குநர் அனிதா, தமிழ் நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் இந்துபாலா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் சிவா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் துணை இயக்குநர் சம்பத், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பரமேஸ்வரி, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.