.

Pages

Saturday, September 23, 2017

சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் சர்வதேச இளைஞர் தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை ரயிலடியில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடக்கி வைத்தார். இதையடுத்து, காந்திஜி சாலை வழியாக அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் இப்பேரணி முடிவடைந்தது.

இளைஞர்களிடையே எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எச்.ஐ.வி. பரிசோதனைக்கு இளைஞர்களை முன்னோக்கி வர வைத்தல், எய்ட்ஸ் இல்லா தொடக்கத்தை நிலைநாட்டுவதற்கு இளைஞர்களின் பங்கு, எச்.ஐ.வி. தடுப்புப் பணிக்காக இளைஞர்கள் கைகோர்த்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.

இதில், மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.