.

Pages

Sunday, September 17, 2017

அமீரகத்தில் நூதன மோசடி குறித்து 'டூ' தொலைத்தொடர்பு நிறுவனம் எச்சரிக்கை !

அதிரை நியூஸ்: செப்.17
அமீரகத்தில் புதிய வகை மோசடி ஒன்று பரவி வருவது குறித்து தனது வாடிக்கையாளர்களை 'டூ' (Du) தொலைத்தொடர்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்களை அழைக்கும் மோசடிப்பேர்வழிகள் தாங்கள் 'டூ' நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், 'டூ' கட்டணத்தை தள்ளுபடியில் சலுகையில் கட்டித்தருவதாகவும் ஆசைவார்த்தைகளை கூறுகின்றனர், மேலும் இவர்கள் திருடப்பட்ட கிரடிட்கார்டுகளை பயன்படுத்தி கட்டணங்களை கட்டுவதால் சம்பந்தப்பட்ட 'டூ' வாடிக்கையாளர் தான் அதிலிருந்து எழும் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிவரும் என எச்சரித்துள்ளனர்.

'டூ' நிறுவனம் எந்த தள்ளுபடி கட்டண சலுகையையும் அறிவிக்கவில்லை அதேபோல் வாடிக்கையாளர்களுடைய வங்கி விபரங்களையோ அல்லது தனிப்பட்ட விபரங்களையோ ஒருபோதும் கேட்காது. பரிசுத்திட்டங்கள் எதையும் நடத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளதுடன் மோசடிப்பேர்வழிகள் உங்களைத் தொடர்பு கொண்டால் உங்களுடைய புகாரை fc@du.ae இதனுள் சென்று தெரிவிப்பதுடன் 'டூ' நிறுவனத்தை எப்போதும் வாடிக்கையாளர் தொடர்பு எண் 155 வழியாக நேரிடையாக தொடர்பு கொள்வதன் மூலம் தாங்கள் ஏமாற்றப்படுவதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.