.

Pages

Friday, September 15, 2017

'தூய்மையே சேவை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துத் துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தூய்மையே சேவை என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (15.09.2017) உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தூய்மையே சேவை - உறுதிமொழி:
இன்று முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறவுள்ள “தூய்மையே சேவை” இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்பணித்து அதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான புதிய பாரதத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்.

வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்நிலைகள் மற்றும் இதர இடங்களில் தூய்மையை கடைப்பிடிப்போம்  என்றும்.

வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறைகளை கட்டுவதுடன், அவ்வாறு கழிப்பறைகள் கட்டாதவர்களையும்  கழிப்பறை கட்டச் செய்து, திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களும், நகரங்களும் உருவாக்கப் பாடுபடுவோம்  என்றும்

கழிப்பறை பயன்படுத்துவதுடன், கை, கால்களை சுத்தமாக கழுவுதல் மற்றும் இதர சுகாதார பழக்கங்களையும் கடைபிடிப்போம் என்றும்

குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு என்ற கோட்பாட்டின் படி திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்றும் உறுதி ஏற்போம்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேசன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணியம், குற்றவியல் அலுவலக மேலாளர் இமானுவேல்வாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் போ.சுருளிபிரபு, கு.சுபாஷ், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் வரதராஜன், ஊரக வளர்ச்சிமுகமை செயற்பொறியாளர் சீனிவாசன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இளங்கோவன், மகளிர் திட்ட அலுவலர் திருமதி.இந்துபாலா,  வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, செய்திகள் தொடர்புத் துறை, மகளிர் திட்டம், மாவட்ட கருவூல அலுவலகத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தேர்தல் பிரிவு, சமூக நலத்துறை அலுவலர்கள், சத்துணவு திட்ட அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், உதவி இயக்குநர் பேரூராட்சி அலுவலர்கள், புள்ளியியல் துறை, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள். ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள், நில அளவைத்துறை அலுவலர்கள் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உறுதி மொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.