.

Pages

Saturday, September 16, 2017

அதிரையில் வேகமாக பரவும் காய்ச்சல் ~ ஜாவியா மஜ்லீஸில் சிறப்பு பிரார்த்தனை!

கோப்புப் படம்
அதிராம்பட்டினம், செப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் மழையால், நீர் தேங்கி நின்ற இடங்களில் கொசு உற்பத்தி அதிகமாகி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகை கடந்த சில வாரங்களாக வழக்கத்திற்கு மாறாக அதிகமாகக் காணப்படுகிறது. தினமும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை வரிசையில் நின்று சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

மேலும் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் தங்கிருந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதில் சிலருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் புகாரி சரீப் மஜ்லிஸ் கடந்த ஆக.22 ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சனிக்கிழமை நடைபெற்ற மஜ்லிஸில் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார். இதில் அதிராம்பட்டினத்தில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், காய்ச்சல் பாதிப்பில் உள்ளவர்கள் பூரண நலம் பெறவும் சிறப்பு பிரார்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.