.

Pages

Tuesday, September 26, 2017

அதிரை பேரூராட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுகாதார ஆய்வாளர் பணி நியமனம் !

சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன்
அதிராம்பட்டினம், செப்.26
அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளராக கே. அன்பரசன் (செப்.25) திங்கட்கிழமை முதல் பொறுப்பேற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், தினமும் 10 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை, துப்புரவு பணியாளர்கள் சுமார் 60 பேர் வரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணியிடம் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ( 7 ஆண்டுகளாக ) நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் மேற்கொள்ளும் துப்புரவுப் பணிகளை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டது. மேலும் பேரூராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவுகளை பதிந்து சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நிரந்தர சுகாதார ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கடந்த செப்.17 அன்று மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதார ஆய்வாளராக திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் சுகாதர ஆய்வாளராக பணியாற்றி வந்த கே. அன்பரசனை, அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்ற உத்தரவு பிறபித்தார். மேலும், பேரூராட்சியில் தற்காலிக செயல் அலுவலராக பணியாற்றி வந்த எல். ரமேஷ் நிரந்தர செயல் அலுவலராக பணியாற்ற அறிவுறுத்தினார். இதையடுத்து செயல் அலுவலர் எல். ரமேஷ், சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன் ஆகிய இருவரும் நேற்று திங்கட்கிழமை முதல் தங்களது பொறுப்புகளை ஏற்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.