.

Pages

Monday, September 25, 2017

அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) அரையாண்டு சந்திப்புக் கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: செப். 25
அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்துவருவது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு சார்பில் அரையாண்டுகால சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மகாணம் வல்லோஹோ நகரில் உள்ள ப்ளூ ராக்ஸ் ஸ்ப்ரிங் மாநகராட்சி பார்க்கில் நடைபெற்றது.

ஜே. சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் புகாரி தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் நஜ்முதீன் விளக்கிப் பேசினார். கூட்டமைப்பின்
நிதிநிலை அறிக்கையை பொருளாளர் முகமது வாசித்தார்.

கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் அண்மை காலமாக சுகாதரச் சீர்கேடு ஏற்பட்டு வேகமாக பரவி வரும் காய்ச்சல் நோய் குறித்து கவலையுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அதிரையில் சுகாதாரப் பணிகளை துரிதப்படுதும் நடவடிக்கை மேற்கொள்வது, அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தூய்மை பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல், மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் தேவைகளை பூர்த்தி செய்வது, குறிப்பாக பிலால் நகர் பள்ளிவாசலில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சில குறைபாடுகளை போக்க நடவடிக்கை எடுப்பது, அதிராம்பட்டினத்தில் பள்ளிவாசல்கள் இமாம்களின் ஊதியம் குறித்து விவாதிக்கப்பட்டன. ஊதியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.

குடும்பத்தினரோடு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு, அமெரிக்கா திரும்பியுள்ள ஹக்கீம் மற்றும் சேட்பேட் ஜபருல்லா ஆகியோர் ஹஜ் பயணம் குறித்து தங்களது அனுபவங்களை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில் இக்குடும்பத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்ட முடிவில், அவ்வமைப்பின் துணைச் செயலாளர் அதிரை சித்தீக் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பினர் பலர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.