.

Pages

Wednesday, September 13, 2017

அதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ~ 65 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

முகாமிற்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்கச் செயலர் எம். அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனையை மேற்கொண்டனர். இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி பொதுமக்கள் 405 பேர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைப் பெற்றனர். இதில் 65 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்டனர். முகாம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடந்தது.

முகாமில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர், மேஜர் எஸ்.பி கணபதி, டி.பி.கே ராஜேந்திரன், சாரா அகமது, செல்வராஜ், எஸ்.ஏ.சி இர்பான் சேக், என். ஆறுமுகச்சாமி, எம். நிஜாமுதீன், அப்துல் ஜலீல், முத்துக்கிருஷ்ணன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் 'கிரசண்ட் பிளட் டோனர்ஸ்' ( CBD ) தன்னார்வ சேவை அமைப்பினர் முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.