வ அலைக்கும் சலாம் சலீம் நீங்க எப்புடி இருக்கீங்க. பட்டுக்கோட்டக்கி வேலக்கி போனதுலேர்ந்து ஆளையே பார்க்க முடியலே. நம்மளையும் கொஞ்சம் பார்த்துக்குங்க.
ஆமா நம்மொ பட்டுக்கோட்டைல வேல பாக்குரதாலே வாரத்துக்கு ஒரு நாளக்கி தான் லீவுல வருவேன். வந்தாக்கா எதாச்சும் இங்கே வேல வந்துடும் வேற எதுவும் தப்பாநேனச்சிக்கிடாதிங்க.இப்பொதான் அசர் தொழுதுட்டு வர்றேன்.அப்புடியே டீ சாப்பிட்டுட்டு மொவன கூட்டிகிட்டு பட்டுக்கோட்ட வரைக்கும் போகணும்ன்டு நெனச்சிக்கிட்டு இறிக்கிறேன் அப்புடியே ஊட்டுக்காரவங்களும் கொஞ்சம் சாமானுவொ வாங்கிட்டு வரச்சொன்னாங்க. சாதிக்.
எதுக்கு சலீம் பட்டுக்கோட்டக்கி இந்த நேரத்துலே. போறீங்க பஸ்ல கூட்டமாவுல இறிக்கிம் அதுவும் மொவன வேற கூட்டிக்கிட்டு போறீங்க. அப்புடி என்னா வேலையா போறீங்க..?
பஸ்சுல யாரு போறது பைக்குள தான் போகணும் சாதிக். எம்மொவனுக்கு பல்லு வலிக்கிதுண்டு அழுவுறான். அதான் பட்டுக்கோட்டக்கி போய் பல்ல புடுங்கி உட்டுடலாமுண்டு கூட்டிக்கிட்டு போறேன். அப்பறம் ஊட்டுக்காரவோ வாங்கி கேட்ட சாமானுவஎல்லாம் இன்னக்கே வாங்கி கொடுத்தாத்தான். நாளக்கி வேல இருக்குது. .
ஏம்ப்ப சலீம் பக்கத்துலே பல்லு டாக்டர வச்சிக்கிட்டு இவ்வளவு செரமப்பட்டு கிட்டு போவனுமா...? நம்மளுவொல நம்பித்தானே இங்க பல்லு ஆஸ்பத்திரி வச்சி இருக்காங்க பேபி நகைகடக்கி பக்கத்துலேயே இருக்கு. அதுக்கு நம்ம தானே ஆதரவு கொடுக்கணும்.
ஆமா சாதிக் நீங்க சொல்றதும் சரிதான் சரி நல்ல டாக்டரா..? நல்லா பாக்குறாங்களாமா..? புதுசா கேள்வி பட்ரேனே...??அதான் யோசனையா இருக்கு...
என்னா இப்புடிகேட்டுபுட்டிங்க சலீம். நல்ல டாக்டரு நல்ல கவனிச்சி பொறுமையா பாக்குறாரு. நான்கூட ஒரு பல்லு புடிங்கி இருக்கேன். புடுங்குன வலியே தெரியல.அப்போதான் நான் நெனச்சேன் நாம இனிமே பல்லு வலிண்டா கவலைபட வேண்டிய தேவை இல்லே. பக்கத்துலேயே நல்ல டாக்டரா வந்துட்டாருண்டு சந்தோசப்பட்டேன்.நம்ம ஆளுங்களுக்கு வெளியூருக்கு போய் அங்க உள்ள டாக்டர்ட்ட காச அள்ளிக்கொடுத்துபுட்டு வந்தாதான் சீக்கு நல்லா போவாட்டியும் நல்லா போன மாதிரி தெரியும். இந்த மனச முதல்லெ மாத்தணும்.
சரி ஆத்திரப்படாதீங்க சாதிக் சும்மா தெரிஞ்சிக்கலாம்ண்டு தான் கேட்டேன். அப்புடீண்டா ஆறுமணிக்கித்தானே கெரண்டு வரும் கெரண்டு வந்த ஒடனே தான் போவனும்.நம்ம வேலை எல்லாத்தையும் சகுனம் பாக்குற மாதிரி கெரண்ட இருக்குதாண்டு பாத்துதான் போகவேண்டிய சூழ்நிலையா இருக்குது.
கெரண்டு தொல்ல தானே பெருன்தொல்லயா இருக்கு. சலீம் ஒரு நாளக்கி பத்துவாட்டி போவுது. கெரண்ட நம்பி ஒரு வேலையும் செய்ய முடியல. இன்னம் இந்தகெரண்ட சரி பண்ண மாட்டேன்குறாங்க. கூப்பன்ல இந்த எலவச சாமானே கொடுக்குறதெ நிறுத்திட்டு கெரண்ட ஒழுங்கா கொடுத்துட்டா ஆளுங்கச்சிக்கி நல்ல பேருதானே.உங்கள்ற யோசனை என்னா...?
மக்களுவொலுக்கு அதா தெரியிது சாதிக். அரசாங்கம் நூறு ரூபாயையும் அரிசியையும் வெல்லத்தையும் கொடுத்தாத்தான் எல்லாத்தையும் மறந்துடுரான்களே.! இந்த இலவசத்த வச்சித்தானே அரசியலு நடந்துகிட்டு இருக்கு.
அப்புடி சொல்லாதீங்க சலீம் நீங்க பல வகையிலே சம்பாரிச்சி வச்சி இருக்கிறீங்க. அதுனால உங்களுக்கு ஒன்னும் பிரச்சன இல்லே ஏழை எளியதுவோ என்னா பண்ணும்..? அவங்களுக்கும் இப்படி அரசாங்கம் ஏதாவது கொடுத்தாதானே காவயிராவது நெறையும். அதெ நம்ம கொற சொல்லகூடாது.
அதுவும் சரிதான் நா ஆத்துரத்துலே அப்புடி சொன்னேன். அப்பறம் சாதிக் கூப்பன்ல இந்த வருஷம் பொருளுவொ வாங்க உள் தாள்ண்டு ஒன்னு வச்சி சீல் அடிச்சி கொடுக்குராங்களே உங்க வூட்டுல வாங்கிட்டாங்களா..? எங்க வூட்டுல வாங்கிட்டதா எங்க வூட்டுக்காரவோ சொன்னாங்க.
எங்க வூட்டுளையும் எம்மொவன் போய் வாங்கி கொடுத்துட்டான்டு எங்கூட்டு காரவொளும் சொன்னாங்க சலீம். அந்த உள் தாள் பேப்பர கிளிச்சிப்புடாமே வர்ற வருஷம் வரைக்கும் பத்தரமா வச்சிக்கிடுங்க இல்லாட்டி ரேசன்ல சாமான் வாங்க முடியாது. அதோட பேருவொ வுடு பட்டு போயிருந்தாலும் இல்லாட்டி வூட்டு விலாசம் மாத்துறதா இருந்தாலும் பாரம் ஒன்னு கொடுக்குறாங்க. அத பூர்த்தி செஞ்சி இந்த பிப்ரவரி மாசம் கடைசிக்குள்ள கொடுத்துடுங்க. என்னா நா சொல்றது காதுல வுளுவுதா சொல்றத கேக்காம மூஞ்சிய தீக்கி வச்சிக்கிட்டு ஏன் நிக்கிறீங்க என்னாச்சிப்பா..?
அதே ஏன் கேக்குறீங்க சாதிக் போன வாட்டி அப்புடித்தான் அவங்க கொடுத்த பாரத்துல கரக்டா பேர எழுதி கொடுத்தும் தப்பு தப்பா பதிஞ்சி வந்துச்சி இன்னமும் கடைசி எழுத்து தப்பாத்தான் இருக்கு. ஓட்டு ஐ.டி ளையும் அப்புடித்தான் நாம ஒன்னு எழுதிக்கொடுத்தா அவங்க ஒன்னு எழுதிடறாங்க. வேல பாக்குற ஆபிசர் கொஞ்சம் கவனித்து பொருப்போட சரிபாத்து கொடுத்துட்டா நமக்கும் டென்சன் இல்லாம போய்டும் அவங்களுக்கும் ரெண்டு வேல இருக்காது. எல்லாம் நம்ம கொடுக்குற வரிப்பணம் தானே சாதிக்கு...!
சலீம் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரியான செய்திதான். அதெல்லாம் ஆரம்பத்துலேதான் அப்புடியாப்பட்ட தப்பு நடந்திச்சி இப்போ எல்லாத்துலயும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரக்கூடாதுண்டு சரியா பாத்து பதியிறாங்க. அதுக்கு காரணம் இருக்கு ஆதார் அட்டைண்டு புதுசா ஒன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்து பதிஞ்சிட்டு போனாங்கள்ள அது வந்துட்டா அதுல எல்லாமே சரியாய் இருக்கனும்ண்டு இப்பொ கவனமா செய்றாங்க இனிமே நீங்க கவலைப்பட வேண்டிய தேவை இல்லெ. நீங்க போய் இப்பவே பாரத்தெ எழுதி கொடுத்துடுங்க..கொஞ்சம் வெள்ளனமேயே போங்க இல்லாட்டி கூட்டமா இரிக்கிம்
சரி சாதிக் நாளக்கி அந்தவேலைய முதல்ல போய் பாத்துட்றேன். இந்த ஆதார் அட்டெண்டு என்னனமோ சொன்னியே அது பதியிரத்துக்கு ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி மக்கள் தொகெ கணக்கு எடுக்க வரும்போது சிலிப்பு ஒன்னு கொடுத்தாங்கலாமுல அத காட்டுனாத்தானே பதிய முடியுமாம்,எங்க தெருவு சானாவயலுக்கெல்லாம் அப்புடி ஒன்னும் கொடுக்கலையே..? அப்போ நாங்க எப்போ பதியிறது...? அதப்பத்தி செய்தி கேள்விப்பட்டா கேட்டு வைங்க
இப்போவே சொல்லிடறேன் சலீம் எனக்கு தெரியும் கேள்வி பட்டேன். அது விடுபட்டு போனவங்களுக்கு பதிய இன்னும் ரெண்டு,மூணு மாசத்துலே மறுபடியும் வருவாங்களாம், அப்போ மறக்காம பதிஞ்சிடுங்க
சரி சாதிக் அதான் ஆறு மணி ஆவப்போவுதுல கெரண்டும் வர்ற நேரமாச்சி இங்கேயே மகரிபு தொழுதுட்டு எம்மொவன கூட்டிக்கிட்டு பல்லு புடுங்க நம்ம ஊரு டாக்டர்டையே போறேன்.
இன்ஷா அல்லாஹ் அப்புறமா பாக்கலாம்...
இன்ஷா அல்லாஹ் அப்புறமா பாக்கலாம்...
அதிரை மெய்சா