அதிரையில் தன்னார்வா தொண்டு நிறுவனங்களில் ஒன்று லியோ கிளப். இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக கடந்த [ 19-01-2013 ] அன்று மாலை 3 மணியளவில் லாவண்யா திருமண மண்டபத்தில் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்பாக நமதூரில் அடிக்கடி நிகழும் வாகன விபத்தை தடுக்கும் நோக்கில் லியோ கிளப் சார்பாக சேது பெருவழிச்சாலையில் உள்ள அபாயகரமான சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை திறந்து வைக்கப்பட்டது.
அவிசோ சார்பாக நமதூரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மனநலம் குன்றியோருக்கான காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள் மற்றும் நிதிஉதவி ஆகியன வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிரலாக வரவேற்புரை பேராசிரியர் K. சையது அகமது கபீர் அவர்களாலும், தலைமையுரை லியோ மண்டல தலைவர் நியாஸ் அகமது அவர்களாலும் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பல்வேரு விருதுகள் வழங்கப்பட்டாலும் சேவைச்செம்மல் விருது காவல்துறை ஆய்வாளார் V. செங்கமலக்கண்ணன் அவர்களுக்கும், குருதிக்குடை விருது A. சாகுல் ஹமீது மற்றும் N. சிகபத்துல்லா ஆகியோருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ வைத்தது.
இந்த நிகழ்ச்சியில் லியோ மற்றும் லயன் கிளப் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் நன்றியுரையை லியோ கிளப் தலைவர் ஹாஜா முகைதீன் அவர்களால் நிகழ்த்தப்பட்டு இனிதே நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றது.
///அதிரையில் தன்னார்வா தொண்டு நிறுவனங்களில் ஒன்று லியோ கிளப். இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக கடந்த [ 19-01-2013 ] அன்று மாலை 3 மணியளவில் லாவண்யா திருமண மண்டபத்தில் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.///
ReplyDelete''தி அதிரை நியூஸ்'' என்னும் புதிய தளம் ஆaiரம்பித்த சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!
இனி நாம் அனைவரும் நமதூரின் சூடான செய்திகளை பாகுபாடு இன்றி பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.
உங்களின் பொது நலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.