வ அலைக்கும் சலாம் சாதிக்
என்னாப்பா சாதிக் நல்லா இருக்கிறியா..? இப்போ எங்க இருக்கே. கொஞ்ச நாளா ஆளையே காணோம். சவுதியிலேந்து வந்ததுக்கு பொறவு ஆளயே பாக்கமுடியலே..?
ஆமா சலீம் நல்லா இருக்கிறியா..? ஒன்னே நானு பாத்து ரொம்ப நாளாச்சில .
நா சவூதிய முடிச்சிட்டு வந்ததுமே நம்ம வேல பாத்தா பட்டுக்கோட்டை பழைய கடையிலேயே வேலக்கி சேந்துட்டே.
ஏன் அதுக்குலேயும் அப்புடிஎன்ன அவசரம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கிட்டு போனா என்ன. வந்து கொஞ்ச நாள்ளே ஏம்ப்பா ஊரவுட்டு ஓடிப்போயிட்டியே சாதிக் ?
சலீமு வெலவாசி எல்லாந்தா நம்ம ஊர்ல தலகீழா இருக்குதப்பா... மீனு மார்கட்டு பக்க போவவே பயமா இருக்கு.மீனு யான வெல குதுர வெல இலப்பா சொல்றாங்க இதுக்கு சவூதி தேவல அங்கே ஒரு மனவு காள மீனு 40, 50,ரியாலுதான் விக்கிது.ஒரு மனுவுன்டா 4 கிலோ நம்மூரு காசுக்கு 800 ரூவா வரும். ஆனா நம்ம ஊருல 1 கிலோ கூட இல்லாத மீன 300, 400 னுன்டுல சொல்றாங்க. எதயு நம்மலப்போல நடுத்தர வாதி காசுகொடுத்து வாங்க முடியல. 1000 நோட்டு எல்லாம் அந்த காலத்துல 10 ரூபா நோட்டுக்கு உள்ள மதிப்பு போல போய்டிச்சி. என்னா பன்றதுண்டு ஒன்னும் புரியல.
என்னா செய்றதுண்டு எனக்கும் ஒன்னும் புரியல சாதிக். .எல்லாம் வெளிநாட்டுலேந்து வர்றவங்க மார்கட்டெ கெடுத்து புட்டாங்க. கொடுவா மீனு திண்டு ரொம்ப நாலச்சிண்டு சொல்லிக்கிட்டு சொல்லுற வெலய 1000, 2000 ன்டு கொடுத்துட்டு வாங்கிட்டு போறாங்க. இப்புடி செஞ்சா நாம எப்புடி வாங்கி திங்க முடியும். சரி அத அப்பறமா பேசிக்கிடலாம் ஒன்கிட்ட ஒன்னு சொல்லலாம்ண்டு நெனச்சேன்.மொவளுக்கு வூடு கட்டி கொடுக்கணும். அதான் மனக்கட்டு ஒன்னு நம்ம தெரு பக்கம் வருதாண்டு பாத்துக்கிட்டு இருக்கேன். ஒன்னும் அமைய மாட்டேங்குது. அப்புடியே வந்தாலும் 15லட்சம் 20 லட்சம் வருமுண்டு சொல்றாங்க. கேட்டா தலைய சுத்துது. எப்புடி நெலம் வாங்கி எப்புடி வூடு கட்டி கொடுக்குரதுண்டு தெரியல..? எங்கயாச்சும் கொரச்ச வேலையில யாரும் மனக்கட்டு போட்டு வித்தா சொல்றியா..?
ஆமாம்ப்பா சலீம் எல்லா நம்ம ஆளுவ செஞ்ச வேல இது.. புரோக்கரு மாறுவோட ஐடியா அமரிக்கா ஆஸ்திரேலியா லண்டன் துபாயிண்டு எல்லாரும் நல்லா சம்பாரிக்கிராங்கண்டு ரேட்ட எல்லா ஏத்தி உட்டு வச்சிட்டாங்க. இதுனால ஏழ நடுத்தர வாசி நம்மலபோல ஆளுவோ ஒன்னும் வாங்க முடியல.வருங்காலத்துல எல்லாம் கொமருவோ எப்புடி கர சேரப்போவுதுண்டு தெரியல. சரி அப்புடி நல்ல மனையா வந்தா சொல்றேன். நானும் எப்பவாச்சும் ஏதாவது வந்தாக்கா வாங்கிப்போட்டு வித்துகிடுரதுதான். இல்லாட்டி உள்ளூர்ல இருந்து கிட்டு எப்புடி காலத்த தள்ள முடியும்..?
அப்போ ஓம்பாடு பரவாஇல்லே. எப்புடியோ நியாயமா ஹலாலா சம்பாரிச்சா சரி.அப்பறம் எல்லாம் மாப்புளக்கி வூடு கொடுக்குற பலக்கத்த இன்னம் வச்சிரிக்கிறது நாலாதான் சாதிக் மனக்கட்டு ரேட்டு ஏறிப்போச்சி. வரதட்சன வாங்க மாட்டோம்ண்டு சொல்லி கல்யாணத்த பண்ணி புட்டு அது என்னா வூடு மட்டும் கேட்கிறாங்க..? இத எந்த கணக்குல சேக்குறது, ஒண்ணுமே புரிய மாட்டேன்குதப்பா ! வயலுவோல எல்லா அழிச்சிட்டு மனக்கட்டு போட்டு வித்துட்டாங்க. இனி நம்ம ஊரு பக்கம் வெல்லாமெண்டா என்னாண்டு நம்ம பேரப்புள்ளயளுவோ கேக்க போரானுவோ.
அப்பறம் சாதிக் கமலஹாசனப்பத்தி விசுவரூபமுண்டு ஒரு படக்கதயெ பத்தி செய்தி கேள்விப்பட்டியா..?
அதான் உலக நாயகன்டு பேர வச்சிக்கிட்டு உலக முசுலிமயே உசுப்பெ ஏத்தி விசுவரூபமுண்டு படத்த எடுத்து முசுலீம் மக்களுவொல்ட்ட பேர கெடுத்து கிட்டாரே சலீம்.
சாதிக் நா சின்னப்புள்ளயைலேந்து கமல் படமுண்டா கடைக்கி போவாமே லீவபோட்டுட்டு போய் பாப்பேன்ப்பா..சின்னப்புள்ளைலே கமலு போட்டாவே கண்ணாடி பீரோவுல ஒட்டி வச்சதுக்கு எங்க வாப்பாட்டே நா அடி வாங்கி இருக்கேன் தெரியுமா..? அப்போவே என் வாப்பா சொல்லுவாரு சினிமா நடிகன்ற போட்டோவ ஏண்டா ஊட்டுக்குள்ள ஒட்டி வக்கிறே தருத்திரியம்டாண்டு சொல்லுவாரு நா கேக்க மாட்டேன். இப்போதான் அதெல்லாம் ஞாபகத்துக்கு வருது.
சலீம் நானும் அப்புடித்தாம்ப்பா கமலு படமுண்டா எனக்கு உசுரு ரெண்டம்பில்ல பட்டுகோட்டக்கி சைக்கிள்ள நானும் ரெஜாக்கும் டபுள்ஸ் போட்டுக்கிட்டு போய் பாப்போம். அப்போவெல்லாம் அவரு படத்துலே முஸ்லீமெ பத்தி தப்பா ஒன்னும் சொல்லல. நல்லா தானே நடிச்சிக்கிட்டு இருந்தாரு. இவ்வளவு வருசமா அரசியலுக்கு கூட வர ஆசைப்படாம அவரு நடிப்ப மட்டும் நடிச்சிக்கிட்டு இருந்தாரு திடீர்ண்டு ஏன் யார்ர தூண்டு கோல்லெ எடுத்தார்ன்டு தெரியல. இப்புடி நம்மலுவொல தீவிரவாதியா படம் எடுத்தாரே இதுல ஏதோ உள்நோக்கம் இருக்குற மாதிரி தெரியுது
சாதிக் அப்போ கமழு படத்தெ இனிமே நம்ம ஆளுவோ யாரும் பாக்க மாட்டாங்கன்டு சொல்லு..
சலீம் நம்மாளுவொலுக்கு ஒன்னும் கேரண்டியா சொல்ல முடியாது. யாரு எப்புடி போனாத்தான் என்னன்டு நெனச்சி சமுதாய சிந்தனையில்லாம ரொம்ப பேரு இருக்கிறாங்க. இனிமேயாச்சும் புரிஞ்சிக்கிடுவாங்கண்டு நெனக்கிறேன்.
சாதிக் என்ன செய்றது. எது எப்புடியோ இந்த நாடு சுதந்திரம் அடைய நம்ம ஆளுவோலும் ரொம்ப பாடுபட்டு இருக்காங்க.ஆனா நம்ம எல்லார்ர பேரையும் மறச்சது மட்டுமல்லாமே இப்போ ஒவ்வொரு ஆளும் தீவிரவாதிண்டு சொல்ல கெலம்பிட்டானுங்க இப்புடி சொல்லி அவன்னவன் சுயநலத்துக்காக எல்லார்ட்டயும் ஒத்துமையா இருக்கிற நம்பல பிரிச்சி லாபம் அடைய பார்க்குரானுவோ. நம்மலுவோல எல்லாரும் தீவிரவாதியா நெனக்க வக்கிரானுவோ வெவரம் தெரிஞ்ச மக்களுக்கு இது தெரியாமலையா இருக்கும்.
சலீம் நா ஒன்னோட பேசிக்கிட்டே மறந்துட்டேன்ப்பா நம்ம கொல்லைலே ஆறுமுகமும் மணி அண்ணனும் வேல செஞ்சிகிட்டு இருக்காங்க. நா போய் வடையும் டீயும் வாங்கி கொடுத்துட்டு வந்துடுறேன்.
சரி சாதிக் அப்புறமா பாக்கலாம். அந்த மனக்கட்டு செய்தியே மறந்துடாதே.
அதிரை மெய்சா
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசார் கொஞ்சம் நில்லுங்க,
ஏன்பா என்னாச்சு?
இல்லே சார், அதாவது அதிரை செய்துன்னு ஒரு புதிய இணையதளம் உண்டாகியிருக்காமே அதப்பற்றி கேட்க்கத்தான்.
ஓ அப்படியா, சரி உன்னிடத்தில் இன்டர்நெட் இணைப்பு இருக்குதா?
இதோ என் கையில் இருக்கு சார், இந்த லாப்டாப்பை ஆன் செய்தால் போதும் இன்டர்நெட் சர்ரென்று வந்துவிடும்.
சரிப்பா இப்போ நீ இந்த இணையதள முகவரியை தவறு இல்லாமல் அதில் எழுது. theadirainews.blogspot.in
சார் பேஜ் ஓபன் ஆயிடுச்சி.
ஓ அப்படியா தலைப்பில் என்ன செய்தி இருகுப்பா.
சார் டீக்கடை சந்திப்புன்னு ஒரு கட்டுரை இருக்கு அதை படிக்கவா?
சப்தமாக நிறுத்தி படி.
நிறுத்துப்பா இந்த இடத்தை மீண்டும் படி,
\\\கமல் படம் விஸ்வரூபம்///
சரி மேலே படி,
இவ்வளவு அழகா இருக்கேப்பா அதை யாருப்பா எழுதியது?
அதிரை மெய்சா என்று போட்டிருக்கு சார்.
அட அவரா? அவர் என்னுடைய நெருங்கிய நண்பராச்சே, மிகவும் விளங்கும்படி இந்த கட்டுரையை கொண்டு போய்ருக்கின்றார்.
சரிப்பா நீயும் தினமும் இந்த இணையதளத்தை பார்க்க வேண்டும் நல்ல நல்ல கட்டுரைகளை எழுத முயற்சிக்க வேண்டும் என்ன புரியுதா?
சரி சார் நான் தவறாமல் பார்ப்பேன் நீங்க சொன்ன மாதிரி முயற்சிப்பேன்.
சரி போய்விட்டு வாப்பா.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.