.

Pages

Saturday, January 26, 2013

காதீர் முகைதீன் கல்லூரித் தாளலரின் குடியரசு தின வாழ்த்துச்செய்தி !

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]

இன்று நாம் 64வது குடியரசு தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இறைவனின் நல்லருளால் காதிர் முகைதீன் நிறுவனங்களின் செயலராக பொறுப்பேற்றுள்ளேன். இந்நாளில் நம் நிறுவனங்கள் அனைத்தும் உயர்ந்த கட்டிடங்களாலும், நல்ல ஒழுக்கத்தாலும், அறிவு எண்ணத்தின் அடிப்படையில் எங்கள் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் செயல்பட்டு வருகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எண்ணங்களின் அடிப்படையில் நம் நாடு 2020க்குள் வளர்ச்சியடைந்த நாடுகளில் முதல் இடத்தைப்பெறும் என்று சொல்லியுள்ளார். இந்த எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. தலைசிறந்த நாடுகளில் நம் நாடு முதன்மையிடத்தைப் பெற வேண்டுமானால் ஒவ்வொரு கிராமங்களிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயர வேண்டும். கல்வி நிறுவனங்களின் தரம் உயர வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் எல்லோருக்கும் உயர்கல்வியை பெற எல்லா முயற்சிகளும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலுள்ள எல்லா மாணவர்களுக்கும் உயர்கல்வி எளிதாக கிடைத்து விட்டால் நம் நாடு, வளர்ச்சியடைந்த நாடுகளில் முதன்மை இடத்தை பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

"காலத்தின் மீது சக்தியாக, நிச்சயமாக, மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு நல் அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ, அவர்களைத் தவிர" என்று திருக்குர்ஆனில் இறைவன் காலத்தின் மீது சதியமிட்டும் சொல்லியிருக்கிறான்.

இந்த அத்தியாத்தை திறந்து மனதுடன் ஆழ்ந்து சிந்தித்து படித்தவருக்கு அவரது இரு உலக வாழ்வின் வெற்றிக்கு இதுவே போதும் எனவே மனிதனின் ஈடேற்றமும், நஷ்டமும் காலம் தான் என்ற அடிப்படையில் காலத்தின் மீது சத்தியம் செய்துள்ளான்.

ஒரு மனிதனின் நஷ்டத்திலிருந்து ஈடேற்றம் பெற நான்கு வழிகள் உள்ளன.

1. இறை நம்பிக்கை
2. நற்செயல்கள் கடைப்பிடிப்பது
3. ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொள்ளுதல்
4. பொறுமையை கடைபிடிப்பது.

முதல் இரு வழிகள், ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்டது. எனவே ஒவ்வொரு தனி மனிதனும் ஈடேற்றம் பெற இறை நம்பிக்கையும் நற்செயல்களும் அவசியம். மற்ற இரண்டு வழிகளிலும், பிற மனிதர்கள் சம்பந்தப்பட்டது. எனவே பிற மனிதர்களும் வாழ்க்கையில் வசந்தம் அடைய சத்தியத்தையும், சத்திய வழியில் நடக்க பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசிக்க வேண்டும்.

இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்து ஈடேற்றத்தை அடைய போகும் ஒவ்வொரு மனிதனும், பிற மனிதனை ஈடேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். எனவே இந்த நான்கு வழிகளையும் பின்பற்றி, இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வில் வசந்தம் பெற இறைவனை பிரார்த்திப்போமாக.

வஸ்ஸலாம்.

ஹாஜி ஜனாப் K.S. சரஃபுதீன்
தாளாளர் - காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள்

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    வளமான வாழ்த்துக்கள்.
    ஜெய் ஹிந்த்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. பள்ளிப்பருவத்தில் கொண்டாடிய (உற்சாக)குடியரசு தின விழா...எங்கே அத்தோடு போய்விடும் என எண்ணினேன்...ஆனால் அது என்றும் எப்போதும் நம்(என்) நினைவில் இருக்கவேண்டும் என்று கூறிய "ஹாஜி ஜனாப் K.S. சரஃபுதீன்" அவ்ர்களுக்கும் அதற்க்கு துணை நின்ற..."தி அதிரை நியுஸ்" குழுவிற்க்கும்...நன்றிகள் பல...

    JAIHIND-PROUD TO BE INDIAN
    ________________________________
    J.M MOHAMED NIZAMUDEEN
    s/o K.M.A JAMAL MOHAMED
    www.nplanners.webs.com

    ReplyDelete
  3. நான் படித்த கல்லூரி
    புகை படம் பார்க்கையிலே
    பழயா நினிவுகளெல்லாம்
    சிறகடித்து பறக்கின்றது
    மேலும் மேலும்
    சிறக்க வழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.