.

Pages

Saturday, January 26, 2013

இந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரையைச் சார்ந்த சகோதரர்கள் !


இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு " இந்தியன் நேஷனல் ஆர்மி " ( INA ). 


நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் "பெரிய மின்னார்" மர்ஹூம் ஜனாப் மு. முகம்மது ஷரிப் மற்றும் மர்ஹூம் ஜனாப் செய்யது முகம்மது ஆகியோர்கள் இந்த அமைப்பில் பணி புரிந்து நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்வை தியாகம் செய்தவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமதூரைச் சேர்ந்த தியாகிகள் சகோ. மர்ஹூம் S.S. இப்றாஹீம் மற்றும் சகோ. அப்துல் ஹமீத் ஆகியோர்களும் நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்வை தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நமதூரைச் சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவரும் வரலாற்றில் பதியப்பட வேண்டும்.

இந்தியா குடியரசுப் பெற்று 64 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த நாளில் நமதூரைச் சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம்.

மறைக்கப்படுவது, மறந்துவிடுவது அல்லது மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.

2 comments:

  1. அருமையான நினைவூட்டல்.

    பதிந்தமைக்கு நன்றி.

    இதுபோல் இன்னும் எத்தனையோ நம் இஸ்லாமிய தியாகிகள் மறைக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களையும் தேடிக்கண்டுபிடித்து உலகறியச்செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. ஆம் உண்மையான விசயம் நம் சமுதாய மக்கள் நிரைப்பேர் சுகந்திர தியாகிகள் மறைக்கப்பட்டு விட்டார்கள் அதனை நாம் தான் வெளிக்கொண்டுவரனும்.அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.