அதிரை நியூஸ், டிச.29
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வு தொகுதி-1க்கு 21 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வு தொகுதி-1 ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 03.01.2021 அன்று முற்பகல் 10 மணி முதல் 1.00 மணி வரை நடைப்பெறும் போட்டித்தேர்வு தொகுதி-1க்கு, 21தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுத வரும் அனைவரையும் அனைத்து மையங்களிலும் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு பரிசோதனை செய்த பிறகே தேர்வர்களை தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளித்திடவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்திடவும், தொடர்புடைய அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள் அருகிலேயே மருத்துவ குழுக்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் தயார் நிலையில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு நாளன்று தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றிட கூடுதல் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் கைப்பேசி மற்றும் மின்னணு தொடர்பான பொருட்கள் கொண்டு செல்ல கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், இயங்கு குழுவினர்கள், ஆய்வு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரை ஒருங்கிணைத்து தேர்வு மையங்களை கண்காணிக்கவும், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே தேர்வர்கள் அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றியும், எவ்வித பயமின்றியும், பாதுகாப்பாகவும் தேர்வு எழுதிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி.முத்து மீனாட்சி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் திருமதி.வேலுமணி மற்றும் வட்டாட்சியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.