இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மனும், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளருமாகிய எஸ்.எச் அஸ்லம் பங்கேற்று, அதிராம்பட்டினம் பேரூர் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பாதாள சாக்கடைத் திட்டத்தை கொண்டு வரவும், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமம் மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டுலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை பம்பிங் மூலம் அதிராம்பட்டினம், தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை, நடுவிக்காடு, மிலாரிக்காடு ஆகிய கிராமங்களின் விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்காகவும், இப்பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தனித்தனி மனுக்களை, திமுக கருத்துக் கேட்புக் குழுவினர் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோரிடம் வழங்கினார்.
அப்போது, தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் க.கல்யாண சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.