தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவான 637.02 மிமீ-ல் இதுவரை 296.41 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 46.53 சதவீதமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வெண்ணாறு கோட்ட பிரிவில் 13 ஏரி, குளங்களில் 6 ஏரி, குளங்கள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையிலும், 3 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையிலும்ää 4 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திற்கு கீழும் நிரம்பியுள்ளது.
கல்லணை கால்வாய் கோட்ட பிரிவில் 524 ஏரி, குளங்களில் 225 ஏரி, குளங்கள் 100 சதவீதமும், 165 ஏரி, குளங்கள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையிலும், 53 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையிலும், 81 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திற்கு கீழும் நிரம்பியுள்ளது. அக்னியாறு கோட்ட பிரிவில் 24 ஏரி, குளங்களில் 2 ஏரி, குளங்கள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையிலும், 22 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திற்கு கீழும் நிரம்பியுள்ளது. ஆற்று பாதுகாப்பு கோட்டத்தில் 81 ஏரி, குளங்களில் 65 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையிலும், 16 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திற்கு கீழும் நிரம்பியுள்ளது.
பொதுமக்கள் மழைக்காலங்களில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மழை, இடி, மின்னல் நேரங்களில் வெட்டவெளி பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கால்நடைகள் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை குறித்த புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்) மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.