.

Pages

Sunday, December 6, 2020

பாபர் மசூதி இடிப்பு தினம்: அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.06
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை  தெற்கு  மாவட்டத்தலைவர் என். முகமது புகாரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், தமிழக  வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணித் தலைவர் ஜெரோன் குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட திரளானோர் பங்கேற்று, வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 ஐ அமல்படுத்த வேண்டும், பாபரி மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும், பாபரி மசூதியை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அகமது அஸ்லம், மாவட்டச்செயலாளர்கள் முகமது ரஹீஸ், முகமது அஸ்கர், மாவட்ட பொருளாளர் இத்ரீஸ், அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் சி.அகமது உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.