அதிரை நியூஸ்: டிச.11
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (11.12.2020) துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்த்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பேருந்துகளில் இருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மேலும், 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் புதிய வாக்காளர் சேர்க்கை படிவத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெறுகிறது. வருகின்ற 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் - 7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு படிவம் - 8, ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் புதிய குடியிருப்பில் முகவரி மாற்றம் செய்ய படிவம் - 8ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வாக்களர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வயது சான்றாகவும், ரேஷன் ஸ்மார்ட் கார்ட், ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முகவரி சான்றாகவும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், தஞ்சாவூர் நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.