இந்நிலையில், தொடர் மழையால் சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவு கொண்ட செடியன் குளத்திற்கு மழைநீர் வர துவங்கியது. தற்போது குளத்தில் பொதுமக்கள் குளித்து மகிழும் அளவில் போதுமான தண்ணீர் நிறைந்து காணப்படுவதால், பொதுமக்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர். இன்னும் சில தினங்கள் மழை நீடித்து பெய்தால் குளம் நிரம்பி தண்ணீர் வழிந்து ஓடும் நிலையை எட்டிவிடும்.
இதுஒருபுறமிருக்க, செடியன் குளக்கரையில் படர்ந்து காணப்படும் புதர்களையும், தேவையற்று வளர்ந்து காணப்படும் செடி கொடிகளையும் அகற்றவும், பெண்கள் குளிக்கும் கரையை சுற்றி பிரதியோகமாக தடுப்புவேலி ஏற்படுத்தவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதவிர, செடியன் குளத்திலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் அருகில் உள்ள தாழ்வான பகுதியாக இருக்கும் பிலால் நகர் குடியிருப்பில் புகாதவாறு முன்னேற்பாடுகளை செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளத்தின் புகைப்படங்கள் இதோ உங்களின் பார்வைக்கு.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.