அதிராம்பட்டினம், மார்ச் -31.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வு விலங்கியல் துறை சார்பில் பணி ஓய்வு பெரும், கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பொ. குமாரசாமிக்கு பாராட்டு விழா விலங்கியல் துறை கருத்தரங்கத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் பணி ஓய்வு பெற்ற விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பொ. குமாரசாமிக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். பேராசிரியர் ஏ. அம்சத் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், எம். நாசர், கல்லூரிப் பேராசிரியர் எஸ்.பி. கணபதி, மக்கள் தொடர்பு அதிகாரி எஸ். ரவீந்திரன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் சி. சிவசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும், கல்லூரி விலங்கியல் துறை பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஏ.புகழேந்தி, ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் என்.உதயகுமார், நெடுங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏ. கார்த்திகேயன், விராலி மலை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை என். ஷைலா, சரபோஜி கல்லூரிப் பேராசிரியர் சுகுமாரன், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரிப் பேராசிரியை கவிதா, புதுக்கோட்டை அரசு பெண்கள் கல்லூரிப் பேராசிரியர் எம். சசிப்பிரியா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வாழ்த்திப்பேசினர்.
முடிவில் பேராசிரியர் எம். முத்துகுமாரவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ஓ. சாதிக், வி. கானப்ரியா, ஏ. மஹாராஜன், ஜே சுகுமாரன், என். வசந்தி மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.