2019 தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி பாதுகாப்பு அறையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஜெகதீஷ்வர் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர் நரேந்திர சங்கர் பாண்டே, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் இன்று (19.04.2019) வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது.
பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது:-
2019 தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி பாதுகாப்பு அறையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குந்தவை நாச்சியார் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறைக்கு அருகில் மத்திய பாதுகாப்பு படை பிரிவினர் முதல் அடுக்கிலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் இரண்டாவது அடுக்கிலும், உள்ளுர் காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மூன்றாவது அடுக்கிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மூன்று அடுக்கு பாதுகாப்பில் சுமார் 300 காவலர்கள் மூன்று சுழற்சி முறையில் பணியாற்றவுள்ளனர். ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு மேற்பார்வை பணியில் ஈடுபடவுள்ளனர்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையமான குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 102 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தஞ்சாவூர்; வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.