அதிராம்பட்டினம் திலகர் தெருவைச் (ஓ.கே.எம் லேன்) சேர்ந்தவர் என்.சிபஹத்துல்லா (வயது 63). அதே பகுதியில் கடந்த 20 வருடங்களாக நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி எஸ்.கணேசமூர்த்தி, கும்பகோணம் டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன், பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்பழகன், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடு போன நகைகளை மீட்டு நகைக் கடை உரிமையாளர் என். சிபஹத்துல்லாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, நகைகளை மீட்பதற்கு துரிதமாக பணியாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி எஸ்.கணேசமூர்த்தி, அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், நகை வியாபாரிகள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத்தார்கள், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
வரவேற்போம் வாழ்த்துத்யோம் காவல்துறையை
ReplyDeleteகாவல்துறையை வாழ்த்தத்யோம்வரவேற்போம்
ReplyDeletethe eligible and interested candidates to apply for SSC MTS 2019 Application Form. SSC MTS Registration Link will open from 22nd April 2019. The last date to fill the Online Application Form is on 22nd May 2019.
ReplyDelete