.

Pages

Thursday, November 12, 2020

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியம் ரூ.15 லட்சமாக உயர்வு!

அதிரை நியூஸ்: நவ.12
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்-2020-2021 மூலம் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10.00 இலட்சத்திலிருந்து ரூ.15.00 இலட்சமாக மானியம்  உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம. கோவிந்தராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினைத் தேடி நகர்ப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்தலை தடுக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக, நலிவடைந்த பிரிவனர் சுயதொழில் தொடங்கி வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடவும், தமிழக அரசின் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பபட்டு வருகிறது.   இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8 -ஆம் வகுப்புத் தேர்ச்சி அடைந்தவர்கள் சுயமாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்திசார்ந்த தொழில்கள் தொடங்கிட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டுவருகிறது.

தற்போது, தமிழக அரசின் அரசாணை எண்.66, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை நாள்.21.10.2020-ன்படி உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு திட்ட மதிப்பீடு உச்சவரம்பு முறையே ரூ.10 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து வங்கிக்கடன் பெறும் உற்பத்தித் தொழில் சார்ந்த பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25%  அதிகபட்சமாக ரூ.1,25,000/- வரை வழங்கப்பட்டுவந்த மானியத்தொகை ரூ.2,50,000/- மாக உயர்த்தப்பட்டுளளது.  

இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். 

மேலும் விவரங்கள் அறிய பொது மேலலளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர்-6 (தொலைபேசி எண். 04362-255318, 257345) என்ற முகவரியை பயனாளிகள் அணுகலாம்.  தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ம. கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.