.

Pages

Wednesday, November 11, 2020

தஞ்சை மாவட்டத்தில் NEET & JEE தேர்வில் அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

அதிரை நியூஸ்: நவ.11
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சாவூர் C”அகடாமியில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு பயிற்சி பெற்று அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவ மாணவியரை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (11.11.2020) பாராட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மாநகரில் C”அகடாமியில் கடந்த 4 ஆண்டுகளாக நீட் மற்றும் ஜேஇஇ போட்டி தேர்வுக்கு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

இவ் அகடாமியில் 2020 நீட் தேர்வில் 48 நபர்கள் தகுதி தேர்ச்சி பெற்றுள்ளனர் மாநில கல்வி பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவ மாணவியர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்தியளவில் மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீட்டில் மூன்று மாணவ மாணவிகளுக்கு ஆணை பெறப்பட்டுள்ளது மேலும் ஜேஇஇ 2020 தேர்வில் தேசிய அளவில் இரு மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர ம.கோவிந்த ராவ் வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், தற்பொழுது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மாநில பாடத்திட்டத்தின் மூலமாக நீட் தேர்வில் அதிக மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இப் பாடத்திட்டத்தினை மாணவ மாணவர்கள் நன்கு புரிந்து கற்று அனைத்து நுழைவுத் தேர்வுகளும்,போட்டிகளும் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் இளைஞர் நிதிக்குழும உறுப்பினர் இரா.சியாமாலா C”அகடாமி நிறுவனர் சே.விஜயரங்கன் நிர்வாக இயக்குனர் வி.ஸ்ரீராமுலு மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.