.

Pages

Saturday, November 7, 2020

தஞ்சை மாவட்டத்தில் 195 ஊராட்சிகளில் 141 கோடியில் தனிநபர் இல்லம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: நவ.07 
தஞ்சாவூர் மாவட்டத்தில் 195 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் 140 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் இல்லம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (07.11.2020) ஆய்வுக்கூட்டம்; நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது;

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2020-2021 ஆண்டிற்கு ஊரக பகுதிகளில் உள்ள 195 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 95 கோடியே 97 இலட்சத்திலும், 15வது நிதிக்குழு மானிய நிதி மற்றும் பிற நிதியிலிருந்து ஒருங்கிணைத்து சுமார் 45 கோடியும்  என ஆக மொத்தம் 140 கோடியே 97 இலட்ச மதிப்பீட்டில் ஊரக பகுதியில் உள்ள தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல்ääஉள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் அரசுப் பள்ளிகள்ääசத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றுக்கு குடி குடிநீர் இணைப்பு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தி குறித்த காலத்தில் ஒப்பந்தக்காரர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து ஜனவரி 2021க்குள் முடித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 195 கிராம ஊராட்சிகளில் உள்ள தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து முடித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.பழனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இராமசாமி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.