.

Pages

Thursday, November 26, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடரும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்!

அதிரை நியூஸ்: நவ.26
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினால் எந்த பாதிப்பும் இல்லை இருப்பினும் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்குமென்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான என்.சுப்பையன் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் நிவர் புயல் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான என்.சுப்பையன், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் இன்று (26.11.2020) செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:        
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 122 நிவாரண முகாம்களில் 1606 குடும்பங்கள், 1761 ஆண்கள், 2261 பெண்கள், 1344 குழந்தைகள் மொத்ததம் 5321 மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவழக்கைக்காக மாவட்டத்தில் 42 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் மனித உயிரி உயிரிழப்பு ஏதுமில்லை. மாவட்ட சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்படவில்லை. போக்குவரத்து ஏதும் தடைபெறவில்லை. மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக 20 மின்கம்பங்கள் சேைந்துள்ளன. மின்கம்ப சேதங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பபு மீள வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில எழு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அவை அனைத்தும் அப்புறப்படுத்தபட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 34 கூரை வீடுகள் பகுதியாகவும், 1 கூரை வீடு முழுமையாகவும், ஓட்டு வீடுகளில் 1 பகுதியாக சேதமடைந்துள்ளது. கால்நடைகளில் 1 மாடு, 2 ஆடுகள் மழையினால் இறந்ததாக தகவல் வரப்பெற்றுள்ளது. உறுதி செய்யப்பட வேண்டும். வருவாய்த்துறை. ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, தீயணைப்புத்துறை, மின்வாரியத்துறை, மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை மற்றும் இதர துறைகள் அலுவலர்கள் நிவர் புயல் அவசரப் பணிக்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீட்பு பணிக்காக தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டியிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 26-11-2020 அன்று மழை அளவு 38.04 மி.மீ (தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆண்டு சராசாரி மழை அளவு 1098.24 மிமீ), மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை, கோட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்ட அலுவலகங்களிலும் 24*7 கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் கோட்ட அளவில் 3 கண்காணிப்பு அலுவலர்களும், சார் ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் வட்ட அளவில் 9 மண்டல அலுவலர்களும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைக்காகவும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ள தடுப்பு பணிக்களுக்காக 41 இடங்களில் 1,06,600 மணல் மூட்டைகளும். 8269 சவுக்கு கட்டைகளும், 2,10,350 காலிசாக்கு பைகளும் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 3000 மின்கம்பங்கள் மின்வாரியத்தால் இருப்பு வைக்கப்பட்டன. 552 மரம் அறுக்கும் கருவிகள், 205 ஜேசிபி, 173 Genset கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 251 நிவாரண முகாம்களில் மண்டல அலுவலர்கள் மூலமாக அழப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உறுதி டிசய்யப்பட்டது. 16 மருத்துவ முகாம்கள் மூலமாக நிவாரண முகாம்கள் ஆய்வு செய்யப்பட்டு COVID மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.108 ஆம்புலன்ஸ்கள், 29 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்ழயிருந்தன. நிவர் புயல் தொடர்பாக 49 புகார் மனுக்கள் பெறப்பட்டதில் 48 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. 1 மனு நடவடிக்கையில் உள்ளது.

மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட மின் துண்டிப்பு துரிதமாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நிவர் புயல் காரணமாக விழுந்த மரங்களை அகற்றும் பணி தொடர்புடைய துறைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள நீர் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களால் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விவசாய பெருங்குடி மக்கள் பயிர் காப்பீடு தொகையை டிசம்பர் 15 வரை செலுத்தலாம்.மழைääபுயல் சேதம் இல்லை என்று பொறுமை காத்திராமல் உடனடியாக அனைத்து பயிர்களுக்கும் பயிர்க்காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.மேலும் மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரி குளங்கள் 618 இதில் 174 ஏரி குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன 199 குளங்கள் 75% முதல் 100மூ வரை நிரம்பியுள்ளன, 135 ஏரி குளங்கள் 50% முதல் 75%  வரை நிரம்பியுள்ளனää83 குளங்கள் 25%  முதல் 50% வரை நிரம்பியுள்ளன, 27 குளங்கள் 25% மேல் நிறைந்துள்ளன மேலும் தமிழக அரசின் உத்தரவின்படி இன்று மதியம் முதல் தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும்

டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்குமென்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் மழை புயல் சேதம் தொடர்பாக புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம்.  

மேலும், புயல் மழை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்திரிக்கைத்துறையினருக்கும், தொலைக்காட்சித்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குனருமான என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.