தஞ்சாவூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக நுண்கதிர்தினம் மற்றும் உலக தர நாள் விழாவில் கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய 40 மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் பாராட்டி கௌரவித்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது;
நவம்பர்8- சர்வதேச நுண்கதிர் (International day of Radiology) நாளான அன்று நுண்கதிர் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் வில்காம் ரோன்ஜன் அவர்களை நினைவு கூறும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்நுண்கதிர் கருவிகளால் கொரோனா தொற்றுடையுரை சிடி ஸ்கேன் மூலமாக கண்டறிய மருத்துவத்துறைக்கு மிகவும் உதவியது. நுண்கதிர் தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் நுண்கதிர் தொழில் நுட்பவினர், உதவியாளர் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நுண்கதிர் கருவி மருத்துவத்துறைக்கு எவ்வாறலாம் உதவுகிறது இதன் பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்.
உலகத் தர (International day of Quality) நாளான 12.11.2020 அன்று முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்து சேவை நாடி வரும் நோயாளியிடம் கனிவோடும் இணக்கமாகவும் சேவைகள் வழங்கப்பட்டுääதனியார் மருத்துவமனைக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் சேவை தரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் முன்னிலைப்படுத்தும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது இந்நாளில் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில்; எவ்வித மனச்சோர்வும் அடையாமல் 24 மணி நேரமும் பணியாற்றிதில் 24 மருத்துவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அவையிற்றிலிருந்து மீண்டு பொது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு பணியாற்றிய மருத்துவர்களையும்ääமருத்துவ பணியாளர்களும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் என அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சுமார் 10,000 கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். கொரோனா சிகிச்சையில் சிறப்பாக பணி மேற்கொண்ட மருத்துவக கல்லூரி பல துறைகளில் பல பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்கள் உட்பட 40 பேர் நபருக்கு இவர்களுடைய சேவையை பாராட்டும் விதமாக “கொரோனா போராளிகள்” என்று கௌரிவிக்கப்படுவதில் மகிழ்ச்சியும், சிறப்பாக மருத்துவ சேவை புரியும் இம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு என் பாராட்டுதலையும் நன்றியையும் உலக தர நாளில் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ).மரு.மருதுதுறை மற்றும் மருத்துவ பேராசிரியர்கள்ääஉதவி பேராசிரியர்கள்ääநுண்கதிர்த்துறை நுட்ப்புனர்ääமருத்துவ பணியாளர்கள்ääசெவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.