அதிரை ஒற்றுமை நலச் சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் பகுதியில் மின்தடையின் போது இறந்தவர் வீடுகளுக்கு ஜெனரேட்டர் மூலம் இலவச மின்சாரம் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் சா.சம்சுல்ரஹ்மான் கூறியது;
'அதிரை ஒற்றுமை நலச் சங்கம் என்ற அமைப்பின் மூலம் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தும் மரக்கட்டில், தண்ணீர் தேக்கி வைக்கும் டிரம், இறந்தவர் உடலை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி, சாமியானா பந்தல், நாற்காலிகள், மின் விளக்குகள், தேனீர் கேன், ஸ்டீல் டேபிள் உள்ளிட்ட 9 வகை பொருட்களை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கடந்த ஆக.15 முதல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவையை, பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தவரும் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை, தன்னார்வலர்கள் சி.அகமது, நவாஸ் ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக, மின்தடையின்போது இறந்தவர் வீடுகளுக்கு ஜெனரேட்டர் மூலம் இலவசமாக மின்சாரம் வழங்குவதற்காக ஜப்பான் நாட்டில் வசிக்கும் அதிராம்பட்டினம் நண்பர்கள் சிலரின் நிதி உதவியில் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில், 5 கேவிஏ புதிய ஜெனரேட்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் தன்னார்வலர்கள் சி.அகமது, நவாஸ் ஆகியோரை 80563 22376, 90922 82689 என்ற அலைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றார்.
Masha Allah...
ReplyDelete