தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என். முகமது ரபீக், 'மக்கத்தம்பி' என்கிற முகமது இலியாஸ், என்.முகமது இஸ்மாயில். இளம் தொழில் முனைவோர்கள். இவர்கள் மூவரும் இணைந்து, அமீரகம், துபை டேரா, புர்ஜ் அல் முரார் பகுதியில், அல் புத்திம் மஸ்ஜீத் அருகில் 'தம்பிஸ் ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் உயர்தர அறுசுவை உணவகத்தின் திறப்பு விழா நாளை (19-11-2020) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் என். முகமது ரபீக், 'மக்கத்தம்பி' என்கிற முகமது இலியாஸ் ஆகியோர் கூறியது;
புதிதாக தொடங்கிய எங்களது உணவகத்தில், குறைந்த கட்டணத்தில் உயர்தர அறுசுவையில் தென்னிந்திய அனைத்து வகை சைவ / அசைவ உணவுகள் உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட வழங்கப்படும். மேலும், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் பிரசித்திபெற்ற மீன் / மட்டன் / கோழி பிரியாணி வகைகள், அஞ்சுகறி சஹன் உணவு, மோட்டா ரைஸ், பாரிக் ரைஸ், புரோட்டா, சப்பாத்தி உள்ளிட்ட அனைத்து வகை உணவுகள், அனுபவமிக்க மேஸ்திரிகளைக் கொண்டு சுவையுடன் தயாரித்து வழங்க உள்ளோம். ஆர்டரின் பேரில் பக்கெட் மட்டன், சிக்கன் பிரியாணி உணவு செய்து கொடுக்கப்படும். இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் உணவருந்த உணவகத்தில் தனியிட வசதி உண்டு. வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர மெஸ் வசதி உண்டு.
நாளை (19-11-2020) அன்று நடைபெறும் உணவகத் திறப்பு விழாவில், அமீரக வாழ் தமிழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, எங்களது புதிய உணவகம் மேம்பட தொடர்ந்து ஆதரவு தரவேண்டும்' என்றனர்.
- உணவகத் தொடர்புக்கு:
- 04- 2733119 / 052 526 3998
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.