.

Pages

Friday, November 20, 2020

மருத்துவம் படிக்க வாய்ப்பு: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியருக்கு பாராட்டு!

பட்டுக்கோட்டை, நவ.20
அரசுப் பள்ளி உள் ஒதுக்கீட்டில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தகுதிபெற்ற பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியருக்கு அரசு மருத்துவர்கள் பாராட்டினர்.

திருவோணம் வெட்டிக்காடு ஊராட்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் அறிவுநிதி, தமிழ்மணி. கூலி வேலை செய்து வருகின்றனர். இத்தம்பதியின் மகள் ஏ. அருள்மொழி. வெட்டிக்கடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014 ஆண்டு நடந்த +2 அரசு பொதுத்தேர்வில் 929 மதிப்பெண் பெற்று, திருப்பூரில் இளங்கலை நர்சிங் படிப்பை 2018 ஆம் ஆண்டு முடித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை சார்பில், கரோனா தடுப்புப் பணிக்காக செவிலியராகப் பணி நியமனம் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், நடப்பாண்டில் முதல்முறையாக நீட் தேர்வு எழுதி, வெற்றி பெற்றார். இதையடுத்து அரசுப் பள்ளி உள் ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சார்பில், தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் தலைமையில், பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பி.கோமதி மற்றும் உதவி மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், மருந்தாளுநர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.