.

Pages

Wednesday, November 18, 2020

திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஏனாதி பாலசுப்பிரமணியன் நியமனம்: அதிராம்பட்டினம் திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து!

அதிரை நியூஸ்: நவ.18
தஞ்சாவூர் மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 3 ஆகப் பிரிக்கப்படுவதாகவும், அதற்குரிய மாவட்டப் பொறுப்பாளர்களையும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் தற்போது தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு  மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

முன்னர் ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 மாவட்டங்களாக வடக்கு, தெற்குப் பகுதி என இருந்ததை மாற்றி தற்போது தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளராக துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக க.கல்யாண சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில், திமுகவினர் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட ஏனாதி பாலசுப்பிரமணியனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.