தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என்.சுப்பையன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ளனர். புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொதுமக்களை பாதுகாத்திட 251 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி தங்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என்.சுப்பையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, தஞ்சாவூர் வட்டம், பள்ளியேறி பேய்வாரி மற்றும் வெண்ணலோடை வெண்ணாற்றங்கரை ஆகிய இடங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என்.சுப்பையன், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், அப்பகுதியிலிருந்த பேரிடர் மீட்புக்குழுவினரிடம் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் விளக்கினார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின்போது பயிற்சி ஆட்சியர் அமித், வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.