.

Pages

Monday, November 16, 2020

தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அதிரை நியூஸ்: நவ.16
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், 31.10.2020 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (16-11-2020 வெளியிட்டார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 9,80,016 பேர், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 10,26,069 பேர், இதர பாலினத்தவர்கள் 130 பேர் உள்ளார்கள். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20,06,215 ஆகும்.

சட்டமன்ற தொகுதி வாரியாக. 

(1) திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 124820 பேர், பெண் வாக்காளர்கள் 125803, மூன்றாம் பாலினத்தவர் 7 ஆக கூடுதல் 250630 வாக்காளர்கள், 

(2) கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 129579 பேர். பெண் வாக்காளர்கள் 134735 பேர். மு்ன்றhம் பாலினத்தவர் 10 பேர் ஆக கூடுதல் 264324 வாக்காளர்கள். 

(3) பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 125166 பேர். பெண் வாக்காளர்கள் 129543 பேர். மு்ன்றhம் பாலினத்தவர் 16 பேர். ஆக கூடுதல் 254725 வாக்காளர்கள். 

(4) திருவையாறு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 128449 பேர். பெண் வாக்காளர்கள்  134158 பேர். மூன்றாம் பாலினத்தவர் 9 பேர் ஆக கூடுதல் 262616 வாக்காளர்கள். 

(5) தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 134898 பேர். பெண் வாக்காளர்கள் 146564 பேர், மூன்றாம் பாலினத்தவர் 53 பேர் ஆக கூடுதல் 281515 வாக்காளர்கள். 

(6) ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 115328 பேர். பெண் வாக்காளர்கள் 120845 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் ஆக கூடுதல் 236176 வாக்காளர்கள். 

(7) பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 115412 பேர். பெண் வாக்காளர்கள் 124769 பேர், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ஆக கூடுதல் 240203 வாக்காளர்கள். 

(8) பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 106364 பேர். பெண் வாக்காளர்கள் 109652 பேர், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் ஆக கூடுதல் 216026 வாக்காளர்கள்.

16-11-2020 அன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின் நகல். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வருகிற 15-12-2020 வரை வைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

01-01-2003 தேதிக்கு முன்னர் பிறந்த தகுதியுடைய மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட, படிவம் எண் 6-ஐ அந்தந்த வாக்குச்சாவடிகளில் கேட்டுப் பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆதார் ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம்.  வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழையிருப்பின், படிவம் எண் 8 பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

இறந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் படிவம் எண் 7 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிபெயர்ந்த வாக்காளர்கள் படிவம் எண் 8ஏ பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.  வருகிற 15,12,2020 வரை மேற்படி கேட்புரிமம் மற்றும் ஆட்சேபனை தொடர்பான விண்ணப்பங்கள் (Claims & Objections) வாக்காளர்கள் வழங்கலாம். மேலும், www.nvsp.in என்ற இணைய தளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு. சிறப்பு முகாம்கள் 21-11-2020, 22-11-2020, 12-12-2020 மற்றும் 13-12,-2020 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும். தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி. மேற்குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்திடலாம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம். 2021 தொடர்பான பணிகள் 16-11-2020 முதல் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளதால். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பகுதிகளில் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்; அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்கி, இறுதி வாக்காளர் பட்டியல். 20-01-2021 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பிழையேதுமின்றி வெளியிட. உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.