தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்த்திடவும், இறப்பு வாக்காளர்களை நீக்குவது கவனமுடன் செய்திட, 2021 வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்திற்கான பயிற்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2021 வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான அலுவலருக்கான சிறப்பு பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (17.11.2020) நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 9,80,016 பேர், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 10,26,069 பேர், இதர பாலினத்தவர்கள் 130 பேர் உள்ளார்கள். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20,06,215 ஆகும்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 தொடர்பான பணிகள் 16-11-2020 முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 21-11-2020 (சனிக்கிழமை), 22-11-2020 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-12-2020 (சனிக்கிழமை), 13-12-2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது.
இம் முகாம்களில் கலந்து கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தற்ப்பொழுது பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை நிலையில் உள்ளதால் புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு புதிய வாக்காளர்களை படிவம் 6ன் படி தவறாமல் சேர்த்திடவும், இறப்பு ஏற்பட்ட வாக்காளர்களை படிவம் 7ன் மூலமாக நீக்குவதற்கு இறப்புச் சான்று போன்ற ஆவணங்களை சரிபார்த்து நீக்குவதற்கு பரிந்துரை செய்திட வேண்டும். முகவரி, பெயர் திருத்தம்; இருந்தால் படிவம் 8ன் மூலம் பூர்த்தி செய்து பெற்றிட வேண்டும். மேலும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிபெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 8ஏ ன் மூலமாக பூர்த்தி செய்து பெற்றிட வேண்டும்
மேலும் வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www. nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் இந்த அறிய வாய்ப்பினை தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் இப்பணியினை சிறப்பாக செய்திட தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.அரவிந்தன் குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை நிருவாக இயக்குநர் சொ.செல்வ சுரபி, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் சீ.பாலச்சந்தர், பயிற்று ஆட்சியர் எம்.பி.அம்ரித் மற்றும் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் கணினி பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.