.

Pages

Thursday, November 5, 2020

தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: நவ.05
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி அளவு இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் காணொளிக் காட்சி வாயிலாக ஏற்றுமதி மேம்பாட்டு குழு கூட்டம் மற்றும் ஏற்றுமதி உற்பத்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (05.11.2020) நடைபெற்றது.

மண்டல கூடுதல் இயக்குனர் வெளிநாட்டு வர்த்தகம் அவர்கள் முன்னிலையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைப்பெற்ற கூட்டத்தில் ஏற்றுமதி உற்பத்தி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்பு உற்பத்திப் பொருட்களான கயிறு சார்ந்த உற்பத்திப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், விவசாய மற்றும் தோட்டக்கலை மூலம் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்கள், மீன்வளத்துறை மற்றும் பால் சார்ந்த பொருட்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி அளவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஐந்து வருடங்களுக்குள் தஞ்சாவூர் மாவட்ட ஏற்றுமதி உற்பத்தி திறன் இரட்டிப்பாக உயர்த்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் முழு முயற்சிகளை மேற்க்கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

காணொளிக் காட்சிகள் மூலமாக நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தொழிற்துறை நிர்வாகளிடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த விளைபொருட்கள் அதிகம் விளைவிப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கிட துறை சார்ந்த அலுவலர்கள் ஏற்றுமதியாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி, தஞ்சாவூர்  மாவட்டத்தில் ஏற்றுமதி உற்பத்தி வரும் காலங்களில் மற்ற மாவட்டங்களை விட அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) ரவீந்திரன், மண்டல அலுவலர் கயிறு வாரியம் பூபாலன், உதவி இயக்குனர் கயிறு வாரியம் வினோத், உதவி பொது மேலாளர் நபார்டு வங்கி, முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் பல்வேறு தொழிற்துறை நிர்வாகிகளும் வணிகர் பேரமைப்பு தலைவர்களும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.