.

Pages

Monday, November 2, 2020

மின்னணு வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறை: ஆட்சியர் நேரில் ஆய்வு!

அதிரை நியூஸ்: நவ.02
தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறையினை இன்று (02.11.2020) மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தாவது;
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல் யூனிட் வி.வி.பேட் போன்றவைகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியை மேற்கொணடு வருகின்றனர். பாதுகாப்பு அறையில் சி.சி.டிவி கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு கண்காணிப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு மாதமும் இப்பாதுகாப்பு  பணியினை மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின்போது தஞ்சாவூர் கோட்டாட்சியர் திருமதி வேலுமணி தேர்தல் வட்டாட்சியர் சந்தனவேல் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.