தஞ்சாவூர் மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தஞ்சாவூர் இரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக தஞ்சாவூர் முக்கிய வீதிகளில் நடைப்பெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (12.11.2020) தொடங்கி வைத்து பேரணியில் கலந்துக் கொண்டார்.
பேரணியில் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாலும், பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பினாலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு செல்கின்றனர். பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கை கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வீட்டிலுள்ள குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்களை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. அரசின் வழிகாட்டுதலை பின்பற்றினால், கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் நிலையை தடுக்க முடியும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் வணிகர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, தீபாவளி பண்டிகையின்போது கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்குதல், கை சுத்திகரிப்பான் வழங்குதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. என ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இப்பேரணியில், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் கோட்டாட்சியர் திருமதி வேலுமணி, மாநகராட்சி நலஅலுவலர் நமச்சிவாயம, செயற்ப்பொறியாளர் ராஜக்குமாரன், உதவி செயற்ப்பொறியாளர்கள், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்ääரெட்கிராஸ் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.