தஞ்சாவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான வளாக நேர்காணலை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான வாளாக நேர்காணலை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (10.11.2020) தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தாவது:
தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு வளாக நேர்காணல் முகாம் முதல்படியாகும். கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களின் திறனை பரிசோதித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அரசால் வளாக நேர்காணல் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கையுடன் நேர்காணலை எதிர்கொள்ள தேவையான அனைத்து பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி உடையவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். தடைகளை எண்ணி கவலைக் கொள்ளாமல், இலக்கை அடைவதற்கு இரவு பகலாக பாடுபடவேண்டும். மாணவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் வெற்றியடைய வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் எம்.சீராளன், உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் செ.ரமேஷ்குமார் மற்றும் அலுவலர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.