அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 82-வது மாதாந்திரக்கூட்டம் கடந்த 13-11-2020 அன்று நடைபெற்றது, இதில், பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை : நெய்னா முகமது (ஒருங்கிணைப்பாளர் )
தீர்மானங்கள்:
1) நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த நேரடிக் கூட்டத்தில் கலந்து சிறப்பித்த நமதூர்வாசிகள் அனைவர்களையும் வரவேற்று பல ஆரோக்கியமான நமதூர் ஏழைகளின் முன்னேற்றப்பாதையின் அடிப்படையில் கலந்து உரையாடப்பட்டது.
2) இவ்வரிடம் இக்கட்டான இக்கால கட்டத்திலும் பென்ஷன் உதவிய 26 நபர்களையும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் இன்ஷா அல்லாஹ் வரும் 2021-க்கான ஆதரவற்ற பென்ஷன் திட்டத்திற்கு 26-ஐ விட குறையாமல் அதிக எண்ணிக்கையில் இத்திட்டத்தில் கலந்து அவர்களின் துஆ பரக்கத்து கிடைக்கும் வண்ணம் உங்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவை தருவதுடன் வரும் கூட்டங்களில் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் தற்கால பொருளாதார பற்றாக்குறையின் அடிப்படையில் வரும் 2021 பென்ஷன் தொகையை அதிகப்படுத்துவது விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
ABMR-ல் கொரோனாவுக்கு முன் இவ்விசயமாக கலந்து முடிவெடுத்ததை குவைத் கிளையின் ஆலோசனைப்பிரகாரம் வரும் வரிடத்தில் அமல்படுத்துவதெனவும் அதற்கு தலைமையக்கத்திலிருந்தும் இதர கிளை நிறுவாகத்திடமிருந்து ஒப்புதல் வந்தவுடன் செயல்பாட்டினை நடைமுறைப்படுத்துவதென ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
3) மையவாடியின் அவசியத்தேவையான மழை தற்காப்பு கூரை ( TEMPORARY SHETTER ) உதவிய அனைவர்களுக்கும் துஆ செய்வதுடன் குறிப்பாக ABM ரியாத் கிளை சார்பாக உதவிய சகோ. அஹமது மொய்தீன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
4) இக்காலகட்டத்தில் நமதூர் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஆறுமாத காலமாக மாதாந்திர சந்தா நிதியை தவறாமல் செலுத்தி உதவிவரும் அனைத்து அதிரை வாசிகளுக்கு நன்றி தெரிவித்து மேலும் வரும் காலங்களிலும் இது போன்று தொடர்ச்சியாக உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
5) ABM-ன் இலவச டயாலிசிஸ் திட்டத்திற்கான பொருளாதார உதவி மற்றும் தொடர்ந்து ஆதரவும் அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) இக்கூட்டத்தில் முன்னால் ஜித்தா AYDA-வின் ( ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION ) பொறுப்புதாரியான சகோ.ஆபிதீன் கலந்து கொண்டு ஆரோக்கியமான பல கருத்து பரிமாற்றங்களை தெரிவித்தார். இக்கூட்டத்தில் இதுபோன்ற பல நல்ல பயனுள்ள கருத்து பரிமாறிய அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
7) கடந்த மார்ச் 2020 முதல் உலகை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் முழுவதுமாக நீங்கிடுமாறும், அத்துடன் இக்காலகட்டத்தில் இறையடி சேர்ந்த நமதூர் ABM-ன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மேலும் நமதூர் வாசிகள் அனைவர்களின் மறுஉலக வாழ்க்கைக்கு துஆ செய்வதுடன் இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
8) இன்ஷா அல்லாஹ் அடுத்த 83-வது அமர்வு DECEMBER மாதம் 11-ம் வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை




No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.