.

Pages

Monday, November 16, 2020

அதிராம்பட்டினத்தில் மஜக மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.15
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பின் பேரில், அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், விவசாயிகள் அணி மாநிலச் செயலாளர் அப்துல் சலாம் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினர்.

இதில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு  மாவட்டச்செயலாளராக அதிரை சேக், பொருளாளராக ஒரத்தநாடு பஷீர் அகமது ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்களை அடுத்து 75 நாட்களுக்கு தொடர்ந்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), நகர நிர்வாகிகள் அதிரை அப்துல் சமது, அஷ்ரப், மதுக்கூர் சாகுல் ஹமீது, மதுக்கூர் ரிபாயூதீன், ஒரத்தநாடு நூருல் அமின், சேக்தாவூது, புதுப்பட்டினம் ஜெகபர் சாதிக், மல்லிப்பட்டினம் ஹுமாயூன் கபிர், சேதுபாவாசத்திரம் சலீம் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.