இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, கடந்த 16-11-2020 அன்று தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் அவர்களால் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், பொது மக்களின் பார்வைக்காக வருகிற 15-12-2020 வரை அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 தொடர்பான பணிகள் 16-11-2020 முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 21-11-2020 (சனிக்கிழமை), 22-11-2020 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-12-2020 (சனிக்கிழமை), 13-12-2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமையபெற்றுள்ள 1151 வாக்குச் சாவடியில் மையங்களில் உள்ள 2291 வாக்குச் சாவடிகளில் இன்று (21-11-2020) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம். 2021 தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன் பொருட்டு, இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சென்னை அருங்காட்சியக ஆணையர் எம்.எஸ். சண்முகம், திருவையாறு தொகுதியில் அமையபெற்றுள்ள சீனிவாச ராவ் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளான பாக எண் 59 முதல் 64 களில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாம்களை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருவையாறு வட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்ததாவது:-
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து மாற்றுத்திறனாளிகளின் பட்டியலைப் பெற்று மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். சிறப்பு சுருக்க திருத்தமுறை நடைபெறும் மையங்களில் பேனர் வைத்திட வேண்டும். வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். வயதானவர்கள் மற்றும் சிறப்பு சுருக்க திருத்த முறை குறித்து ஆட்டோவின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்திட வேண்டும் என தெரிவித்த வாக்காளர் பட்டியல் பார்வையாளர், படிவம் 6,7,8,8ஏ ஆகியவற்றின் கையிருப்பு குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்னர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் மேற்படி நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களின்போது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்திட. படிவம் எண் 6. பெயரை நீக்கம் செய்ய படிவம் எண் 7; ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் எண் 8ஏ பிழையினைத் திருத்தம் செய்ய படிவம் எண் 8 படிவங்களை வாக்குச்சாவடியில் பெற்று பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடியில் வழங்கலாம். வருகிற 15-12-2020 வரை மேற்படி விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும். மேலும், வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏற்படும் அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 யை அழைத்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் மற்றும் புகார்களை பதிவு செய்து தீர்வு பெறலாம்.
வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள், www.nvsp.in என்ற இணைய தளம் முகவரி வழியே ஆன்லைன் மு்லமாகவும் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.