அதிராம்பட்டினம், நவ.29
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், வாழ்வாதார உதவியாக ஆதரவற்ற பெண் பயனாளி இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அவ்வமைப்பின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆதரவற்ற அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் பயனாளி இருவருக்கு, கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் அளித்த நிதியில், ரூ.14 ஆயிரம் மதிப்பிலான நாற்காலியுடன் கூடிய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் ஏ.எஸ் அகமது ஜலீல், ஓ.சாகுல் ஹமீது, எச் முகமது இப்ராஹிம், முகமது முகைதீன், எம்.நிஜாமுதீன், முகமது புஹாரி, டி.ஏ அகமது அனஸ். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sunday, November 29, 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.