எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் (30-10-2020) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் என்.சஃபியா, தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் என்.முகமது புஹாரி ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பின்னர், பயிலரங்கில் பங்கேற்றோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினர்.
பயிலரங்கில், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து பேசப்பட்டன. கட்சி சார்பில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாக களப்பணியாற்றுவது, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டி நியமிப்பது என்பன உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இப்பயிலரங்கில், பெண்கள் உட்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வினை, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் இணைச்செயலாளர் சி.அகமது தொகுத்தளித்தார். நிறைவில், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் எம்.ஜர்ஜிஸ் அகமது நன்றி கூறினார்.