அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த ஒட்டுமொத்த தூய்மைப் பணி செய்ய வேண்டும் என அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி செய்திட அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது
இதுகுறித்து சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ.விவேகானந்தன் அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
வடகிழக்கு பருவமழை தொடங்கப்போவதை முன்னிட்டு டெங்குக் காய்ச்சல், எலி காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும்
பேரூராட்சி பகுதியில் டெங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் பேரூராட்சியின் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுகள், உடைந்த ஓடுகள், மரக் கழிவுகள், கட்டிட கழிவுகள் ,டயர்கள் கொசுக்கள் உற்பத்தி ஆகக்கூடிய அனைத்து கொள்கலன்கள் ஆகியவற்றை அகற்றிட ஒட்டுமொத்த தூய்மை பணி செய்ய வேண்டும்.
பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தினந்தோறும் சென்று குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களில் உள்ள கழிவுகள், குப்பைகளை அகற்றி மழை நீர் எளிதில் வடிய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க கழிவு நீர் வாய்க்கால்களில் கொசுப்புழு ஒழிப்பு மருந்துகளை வேண்டும்
பேரூராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திட வேண்டும்
மழை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் விதத்தில் அதிராம்பட்டினத்தில் உள்ள மேல்நிலை தொட்டிகள் தரைமட்ட தொட்டிகள் அனைத்தையும் மாதம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு தூய்மை செய்து குளோரினேஷன் செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும்
குடிநீர் குழாய்களில் ஏற்படும் விரிசல் களை அவ்வப்போது கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை மனுவின் நகல் உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்), வட்டார மருத்துவ அலுவலர், அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் தாமரங்கோட்டை ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.