.

Pages

Thursday, October 1, 2020

கரோனா விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார் (படங்கள்)

அதிரை நியூஸ்: அக்.01
தஞ்சாவூர் மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தஞ்சாவூர் இரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக தஞ்சாவூர் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (01.10.2020) தொடங்கி வைத்து பேரணியில் கலந்துக் கொண்டார் .

இப்பேரணியில் கடைவீதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார். தொடர்ந்து கடைகள் மற்றும் டீக்கடைகள் பழக் கடைகள் போன்ற கடைகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டி கடை ஊழியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முக கவசம் அணிவது குறித்து  மாவட்ட ஆட்சித் தலைவர் வலியுறுத்தினார்;.

மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தாவது :
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் மருத்துவத்துறை மற்றும் இதர துறையினர் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள காரணத்தினால்ää அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல்ää தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல்ää கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 11194 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 9503 நபர்கள்  சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1513 நபர்கள் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களை அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக இடங்களில் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் இதுவரை சுமார் 9 லட்சம் முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 11,000 நபர்களிடமிருந்து சுமார் 23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார். 

பின்னர், சாலையில் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபதாரம் விதித்து முக கவசம் அணியாமல் வந்த நபரை உடனடியாக நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது என்று வலியுறுத்தி முக கவசம் அணியாமல் வருபவர்கள் கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரித்தார் 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) எஸ்.எஸ்.மகேஸ்வரன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் திருமதி.ஜானகிரவீந்திரன், தஞ்சாவூர் கோட்டாட்சியர் திருமதி வேலுமணி, மாநகராட்சி நல அலுவலர் நமச்சிவாயம், செயற்பொறியாளர் ராஜக்குமாரன், உதவி செயற்ப்பொறியாளர்கள், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.