பட்டுக்கோட்டை வட்டம், சின்ன ஆவுடையார்கோயிலில் இயங்கி வரும் மணல் குவாரியை தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி, சிஐடியு மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சிஐடியு அலுவலகத்தில், மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்துப் பேசினார்.
கூட்டத்தில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் மாட்டு வண்டி சங்கம் கே.சோமசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பொறுப்பாளர்கள் தேர்வு
கூட்டத்தில், வெட்டிக்காடு சுந்தரமூர்த்தி, கோட்டகுடி பழனிவேல், கரிக்காடு குமரேசன், கழுகுப்புலிக்காடு கருப்பையன், புக்கரம்பை பெரியசாமி, பண்ணவயல் நாடிமுத்து, திருச்சிற்றம்பலம் செல்வம், சம்பயங்கன்னி அண்ணாதுரை, அதம்பை ஸ்டாலின், லட்சத்தோப்பு ராமையன், நைனாகுளம் பாலு, பண்ணவயல் வடக்கு சவுந்தரவாசன், ஒட்டங்காடு முனியாண்டி, நடுவிக்கோட்டை முருகேசன், காயாலூர் பாதரங்கோட்டை முருகேசன், சிவக்கொல்லை ராஜேந்திரன் உள்ளிட்ட கிராம பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம்
பேரவையில், "சின்ன ஆவுடையார் கோவில் மணல் குவாரியை தொடர்ந்து நடத்திடவும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய குவாரியை அமைத்து தரவேண்டும்" எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பட்டுக்கோட்டை மாட்டு வண்டி சங்கம் என்.சக்திவேல் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.