தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் ~ உறுப்பினர்கள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் 30.10.2020 அன்று வெள்ளிக்கிழமை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். செயலாளர் எம்.நிஜாமுதீன் மாதாந்திர அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் சங்க நிதி நிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், பசித்தோருக்கு அன்னதானம் வழங்குவது, கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடத்துவது, நடைபாதை எளிய வியாபாரிக்கு தள்ளுவண்டி ஒன்றை இலவசமாக வழங்குவது, எதிர்வரும் 14-11-2020 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சேவைப் பணிக்காக, மாவட்ட ஆளுநரின் வாழ்த்து மடல் பெற்ற சங்கத்தலைவர் எம்.அப்துல் ஜலீலுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நிறைவில் சங்க இயக்குநர் என்.ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர். செல்வராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் பி.பிச்சமுத்து, என்.யூ ராமமூர்த்தி, எம்.முகமது அபூபக்கர், எம். அப்துல் ரஹ்மான், சி.சார்லஸ், முல்லை ஆர்.மதி, குப்பாஷா எம்.அகமது கபீர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், கலையரசன், எம்.ஏ முகமது அபூபக்கர், ஏ.வி.எம் வரிசை முகமது, ஏ.முகமது ஆரிப், ஒய்.முகமது அபூபக்கர், எம்.ஹாஜா நசுருதீன், ஏ.அயூப்கான் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.