.

Pages

Thursday, October 15, 2020

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தையல் இயந்திரங்கள் வழங்கல்!

பட்டுக்கோட்டை, அக்.15
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில், தனி நபர் வாழ்வாதார உதவியாக 4 பயனாளிகளுக்கு ரூ 35 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.பைசல் அகமது தலைமை வகித்தார். நிகழ்வில், எஸ்.ஆர் ரவி நினைவாக, ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர் முகமது அலி ஜின்னா மற்றும் பட்டுக்கோட்டை இறகுப்பந்து நிர்வாகிகள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கினர். 

இந்நிகழ்வில், ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஏ.ஆர் அன்பு, பட்டுக்கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் ஏ. சக்திவேல், பொருளாளர் எஸ் சுல்தான் இப்ராகிம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.